ஹாமாஸின் காசாவில் பத்தா அரிய பேரணி

பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் பத்தாஹ் அமைப்பினர் தனது பிரதான போட்டி அமைப்பான ஹமாஸ் குழுவினர் அதிகாரத்தில் உள்ள காசாவில் அரிய பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.

ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் பத்தாவின் 55 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு கடந்த புதன்கிழமை காசா சிட்டியில் இடம்பெற்றது. பத்தா கொடியை அசைத்தவாறு அவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஹமாஸ் நிர்வாகத்தால் பல டஜன் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து கடந்த ஆண்டு இந்தக் கூட்டத்தை பத்தா ரத்துச் செய்தது.

இந்நிலையில் இந்தப் பேரணியை நடத்துவதற்கு காசா உள்துறை அமைச்சு அனுமதி அளித்ததை அடுத்து இந்த ஆண்டு கூட்டம் இடம்பெற்றுள்ளது. அப்பாஸ் படையிடம் இருந்து 2007 ஆம் ஆண்டு ஹமாஸ் போராளிகள் காசா நிர்வாகத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது தொடக்கம் இரு தரப்புக்கும் இடையே பிளவு நீடித்து வருகிறது. பலஸ்தீன ஜனாதிபதி ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையை தளமாகக் கொண்டே இயங்கி வருகிறார்.

Fri, 01/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை