45 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு உதைபந்தாட்டப் போட்டி

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 'டைமன் ஸ்டார்' விளையாட்டுக் கழகத்தின் 45 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி கடந்த மூன்று தினங்களாக நானாட்டான் பிரதேச பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது. சுமார் 40 அணிகள் பங்கு பற்றிய உதைபந்தாட்ட போட்டியில் சென் ஜோசப் முத்தரிப்புத்துரை அணியும், சென் சேவியர் தேவன்பிட்டி ஆகிய இரு அணிகளும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகினர்.

இறுதிப் போட்டியானது நேற்று முந்தினம் ஞாயிற்றுக்கிழமை(19) மாலை 04.30 மணிக்கு ஆரம்பமானது.

நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம், நானாட்டான் பிரதேச செயலாளர், நானாட்டான் பங்குத்தந்தை, டைமன்ட் ஸ்டார் விளையாட்டு கழக வீரர்கள் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இரண்டு அணிகளும் கோல்கள் அதனையும் போடாத காரணமாக தண்ட உதை வழங்கப்பட்டது.இதன் போது 4−3 என்ற கோல் கணக்கில் சென் ஜோசப் முத்தரிப்புத்துரை அணி வெற்றி பெற்றது.

வெற்றி பெற்றவர்களுக்கான கேடயங்கள் பணப்பரிசில்களும் சிறப்பு விருந்தினர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.

 மன்னார் குறூப் நிருபர்

Tue, 01/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை