அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்க ஏற்பாட்டில் ஏ,பி பிரிவுகளுக்கான உதைபந்தாட்ட போட்டிகள்

அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தினால் ஏ மற்றும் பி பிரிவுகளுக்கான உதைபந்தாட்ட போட்டிகள் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தினால் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவரும் கல்முனை மாநகர சபை முதல்வர் ஏ.எம்.ரகீப் தலைமையின் கீழ் சங்கத்தின் செயலாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் அப்துல் மனாபின் நெறிப்படுத்தலில் போட்டிகள் இடம்பெறுக்கின்றது.

இதற்கமைய ஏ பிரிவுக்கான முதலாவது போட்டிகள் கடந்த (19) கல்முனை சந்தான்கேணி ஐக்கிய பொது மைதானம், மசூர் மெளலான மைதானத்தில் என்பவற்றில் இடம்பெற்றது.

இதில் கல்முனை பிர்லியண்ட் விளையாட்டு கழகம் மற்றும் சாய்ந்தமருது பிளேன் ஹோர்ஸ் ஆகிய கழகங்களுக்கிடையிலான போட்டியில் (4-0)என்ற கோல் கணக்கில் கல்முனை பிர்லியண்ட் விளையாட்டு கழகம் இப் போட்டியில் வெற்றி பெற்றது. அத்துடன் மருதமுனை கோல்ட் மைன்ட், மருதமுனை கிரீன் மெக்ஸ் கழகங்களுக்கிடையிலான இப் போட்டியில் (02-−00)என்ற கோல் கணக்கில் மருதமுனை கோல்ட் மைன்ட் கழகம் இப் போட்டியில் வெற்றி பெற்றது.

மேலும் ஏ பிரிவில் 10 கழகங்களும், பி பிரிவில் 20கழகங்களும் மொத்தமாக 30 உதைபாந்தாட்ட கழகங்கள் இப்போட்டியில் விளையாடவுள்ளனர்.

இப் போட்டிகள் யாவும் கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய பொது மைதானம், மருதமுனை மசூர் மெளலான மைதானம், நற்பிட்டிமுனை பொது மைதானம், சாய்ந்தமருது வொலிவோரியன் மைதானம், காரைதீவு விவேகானந்தா மைதானம் ஆகிய இடங்களில் இப் போட்டிகள் இடம்பெறவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் அப்துல் மனாப் தெரிவித்தார்.

கல்முனை சுழற்சி நிருபர்

Tue, 01/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை