கெர்பர் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

அடிலெய்ட் சர்வதேச டென்னிஸ்:

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடருக்கு முன்னோட்டமாக கருதப்படும் அடிலெய்ட் சர்வதேச டென்னிஸில் ஏஞ்சலிக் கெர்பர் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

டென்னிஸில் அடிலெய்ட் சர்வதேச தொடர் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய பகிரங்கத்துக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்தத் தொடரின் முதல் சுற்றில் முன்னாள் முதனிலை வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பர் சீனாவைச் சேர்ந்த வாங் குயியாங்-ஐ எதிர்கொண்டார்.

இதில் ஏஞ்சலிக் கெர்பர் 6--1, 6--3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

கடந்த 9 தொடர்களில் நான்கு ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள கெர்பருக்கு, இந்த ஆண்டின் முதல் வெற்றி அவுஸ்திரேலிய பகிரங்க தொடருக்கான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

Wed, 01/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை