ஹமீதியன் உதைபந்தாட்ட கழக ஏற்பாட்டில் 2ஆவது ஹமீடியன் சுப்பர் 16 உதைபந்தாட்ட தொடர்

கொழும்பு ஹமீட் அல்- ஹூஸைனி கல்லூரியின் ஹமீதியன் உதைபந்தாட்ட கழக ஏற்பாட்டில் 2 ஆவது தடவையாக ஏற்பாடு செய்துள்ள ஹமீடியன் சுப்பர் 16 உதைபந்தாட்ட தொடர் இன்றும் நாளையும் கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

அணிக்கு 7 பேர் கொண்ட உதைபந்தாட்ட போட்டியாக இடம்பெறவுள்ளது. இந்த போட்டி தொடரில் கல்லூரியின் பழைய மாணவர்களை பிரதிநிதித்துவப்படுத்தி 15 அணிகள் பங்கேற்கவுள்ளன. போட்டித் தொடருக்கு பிரதான அனுசரணையாளர்,தங்க அனுசரணை,வெள்ளி அனுசரணை மற்றும் நீல அனுசரணை என கல்லுரியின் பழைய மாணவர்களின் நிறுவனங்கள் அனுசரணை வழங்கவுள்ளமை விசேட அம்சமாகும்.

போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு புதிய சீருடைகளும் வழங்கப்பட்டன.

இங்கு உரையாற்றிய அதிபர் எங்களது பாடசாலை தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திற்கு கடந்த காலங்களில் உதைபந்தாட்ட வீரர்களை உருவாக்கியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த பாடசாலை 135 வருடங்கள் வரலாற்றை கொண்டதாக உள்ளது.1957 ம் ஆண்டு இடம்பெற்ற ஜோன் டாபர்ட் உதைபந்தாட்ட போட்டி மற்றும் பல்வேறு உதைபந்தாட்ட தொடர்களில் வெற்றியீட்டியுள்ளது. இது மட்டுமல்ல வருடா வருடம் நடத்தும் பாடசாலைகளுக்கு இடையிலான அழைப்பு ஜனாதிபதி கிண்ண உதைபந்தாட்ட போட்டியையும் கல்லூரியின் 80 ஆவது பழைய மாணவர்கள் குழு நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பரீத் ஏ றகுமான்

Sat, 01/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை