அமெரிக்காவின் உறுதி மொழியை மீறி வடகொரியா ஏவுகணைச் சோதனை

செயற்கை கோள் ஏவு தளத்திலிருந்து மிகவும் முக்கிய பரிசோதனையை மேற்கொண்டதாக வடகொரிய அரசு தெரிவித்துள்ளது. இப்பரிசோதனை நாட்டின் கேந்திர அந்தஸ்தை மேம்படுத்த உதவுமென தெரிவித்துள்ள வடகொரியா,இது தவிர மேலதிக தகவல்கள் எதையும் வெளியிடவில்லை.

இச்சோதனை செயற்கைக்கோளை ஏந்திச் செல்லும் ராக்கெட் எஞ்சின் தரையில் சோதிக்கப்பட்டதாகவோ அல்லது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையாகவோ இருக்கலாமென ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை முறித்துக்கொண்ட பின்னர் வட கொரியா இப்பரிசோ தனையை நடத்தியுள்ளது.

இப் பரிசோதனை சோஹோ செயற்கைக்கோள் தளத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றுள்ளது. இந்த தளத்தை வடகொரியா மூடிவிடுமென அமெரிக்கா உறுதியளித்தமையும் குறிப்பிடத்தக்கது.

அணுவாயுதங்களைக் கைவிடுவதற்கான பேச்சுக்களை

இனிமேல் அமெரிக்காவுடன் நடத்த வேண்டிய அவசியம் இல்லையென ஐ.நாவுக்கான வட கொரிய தூதர் கிம் சோங்,தெரிவித்துள்ள நிலையிலே இப்பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.வட கொரியா மீதான தடைகள் விலக்கப்படுவது உள்ளிட்ட ஷரத்துகளுடன் புதிய ஒப்பந்தத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் தயார் செய்து மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறும் இல்லையேல் வட கொரியா வேறொரு பாதையை தேர்ந்தெடுக்கும் என்றும் ஏற்கனவே எச்சரித்திருந்தது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்த பேச்சுவார்த்தை உடன்பாட்டை எட்டுமென்ற நம்பிக்கையில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் உடன் அதிபர் ட்ரம்ப் இருமுறை உச்சி மாநாட்டில் பங்கேற்றதுடன் வட கொரியா எல்லைக்கே சென்று ஜனாதிபதி கிம்முடன் கையும் குலுக்கினார்.எனினும் வட கொரியா அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பான பேச்சுவார்த்தையை முக்கிய கட்டத்துக்கு கொண்டு செல்வதில் டிரம்ப் தோல்வி கண்டார்.

Tue, 12/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை