ஐக்கிய தேசிய கட்சியுடன் எவ்வித சமரசங்களும் கிடையாது

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் எவ்வித சமரசங்களையும் செய்துக்கொள்ளாதென்பதுடன், அக்கட்சியுடன் எந்த பேச்சுவார்த்தைகளையும் நடத்தாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் இங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற தருணத்தில் சிறு கட்சிகள் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவோம் எனவும், ஒரு குழுவினர் தனித்து வேட்பாளரை நிறுத்துமாறும் மற்றுமொரு குழுவினர் ஐக்கிய தேசிய கட்சியின் உதவியுடன் சுதந்திரக் கட்சியை பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.

ஆனால், நாம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தவிர்ந்து வேறு யாருடனும் கலந்துரையாட தயாராக இருக்கவில்லை. இந்த தீர்மானத்தால் கட்சிக்கு பாதுகாப்பில்லையென சிலர் கூறினர். கட்சி பாதுகாப்பாகவிருந்து நாடு பாதுகாப்பில்லாதிருந்தால் அதில் அர்த்தமில்லை.

ஆனால், இன்று நாட்டில் 100 சதவீதம் பாதுகாப்புள்ளதாக மக்கள் முழுமையாக நம்பிக்கை கொண்டுள்ளனர்.

கட்சியின் பாதுகாப்பை அவ்வாறு கருத்திற்கொள்ளுமாறும் நான் கோருகிறேன். எதிர்காலத்தில் ஐ.தே.கவுடன் எவ்வித சமரசங்களையும் நாம் ஏற்படுத்திக்கொள்ள மாட்டோம் என்பதுடன், ஐ.தே.கவுடன் எவ்வித கலந்துரையாடல்களும் நடத்தப்பட மாட்டாதெனவும் அவர் கூறியுள்ளார்.

 சுப்பிரமணியம் நிஷாந்தன்

Tue, 12/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை