தோல்வியின் பின் மக்களை சந்திக்கவுள்ள சஜித்

ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் மௌன விரதம் அனுஷ்டித்து வந்த சஜித் பிரேமதாச மீண்டும் தனது மக்கள் சேவையை ஆரம்பிக்கவிருக்கிறார். எதிர்வரும் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு கொலன்னாவையிலிருந்து தனது மக்கள் பணியை அவர் தொடங்கவுள்ளார்.

கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்காரின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பில் சஜித் பிரேமதாச பங்கேற்று உரையாற்றவுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உருவான முறுகல் காரணமாக ஒதுங்கி இருந்த சஜித் பிரேமதாச கட்சி நிருவாக மாற்றத்தை வலியுறுத்திவந்தார். கட்சித் தலைமைத்துவத்தையும் எதிர்க் கட்சித் தலைவர் பதவியையும் தனக்குத் தர வேண்டுமென்று கோரி வந்தார்.

இந் நிலையில் கடந்த வாரத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணி பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் சஜித்தை எதிர்க் கட்சித் தலைமைப் பதவிக்கு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் பிரேரிக்கப்பட்டதையடுத்து முறுகல் நிலையில் தளர்வு ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் கட்சி நிருவாக மாற்றம் தொடர்பில் தீர்மானிக்க கட்சி முடிவெடுத்திருக்கும் நிலையில் பொதுத் தேர்தலின் போது சஜித்தை பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.

எம்.ஏ.எம். நிலாம்

Fri, 12/13/2019 - 09:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை