இந்தியா- மேற்கிந்தியதீவு இன்று மோதல்

இந்தியா---மேற்கிந்தியதீவு அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இன்று நடக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி கடந்த மாதம் பங்களாதேஷுக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடியது.

இதன் 20 ஓவர் தொடரை ரோகித்சர்மா தலைமையிலான அணி 2-1 என்ற கணக்கிலும், டெஸ்ட் தொடரை விராட் கோலி தலைமையிலான அணி 2-0 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.

அடுத்து இந்திய அணி மேற்கிந்திய தீவுடன் மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் ஆட்டத்தில் விளையாடுகிறது.

இந்தியா-மேற்கிந்தியதீவு அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

விராட்கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கிந்தியதீவு அதன் சொந்த மண்ணில் இந்திய அணி வீழ்த்தி இருந்தது.

அதேநேரத்தில் மேற்கிந்தியதீவு அணியில் 20 ஓவர் போட்டிக்கு ஏற்ற வீரர்கள் இருப்பதால் கவனமுடன் ஆட வேண்டிய நிலையும் இருக்கிறது.

பங்களாதேஷ் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட தலைவர் விராட் கோலி 20 ஓவர் அணிக்கு திரும்பி இருக்கிறார். இது தவிர ரோகித்சர்மா, ஷிரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ரி‌ஷப்பந்த், மனிஷ்பாண்டே போன்ற சிறந்த அதிரடி துடுப்பாட்டவீரர்களும் உள்ளனர்.

தொடக்க வீரர் தவான் மிகவும் மோசமான நிலையில் உள்ளார். ஆனாலும் தேர்வு குழு அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கி உள்ளது. அவர் நெருக்கடியில் இருந்து மீள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

வேகப்பந்தில் தீபக் சாஹர் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறார். பங்களாதேஷுக்கு எதிரான கடைசி 20 ஓவரில் அவர் 7 ஓட்டங்கள் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி சாதனை புரிந்தார்.

இது தவிர வாஷிங்டன் சுந்தர், யசுவேந்திர சஹல் ஆகியோரும் நேர்த்தியாக வீசக்கூடியவர்கள். வேகப்பந்து வீரர்களான முகமது ‌ஷமி, புவனேஷ்வர் குமார் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள். இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

சகல துறைவீரர் வரிசையில் ஜடேஜா, ஷிவம் துபே உள்ளனர். இதில் புதுமுக வீரர் துபே பங்களாதேஷுக்கு எதிராக பந்து வீச்சில் சாதித்தார். மேற்கிந்தியதீவு அணி இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை தொடர்ச்சியாக இரண்டு முறை (2018 நவம்பர், 2019 ஓகஸ்ட்) இழந்து இருந்தது. இதற்கு தற்போது நடைபெற இருக்கும் தொடரில் பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்து இருந்தது.

லக்னோவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒருநாள் தொடர் (3-0) மற்றும் டெஸ்டில் வெற்றி பெற முடியாத மேற்கிந்தியதீவு அணியால் 20 ஓவர் தொடரை கைப்பற்ற முடியவில்லை.

மேற்கிந்தியதீவு தலைவர் பொல்லார்ட் சிறந்த அதிரடி வீரர் ஆவார். இது தவிர லெண்டில் சிம்மன்ஸ், லீவிஸ், ஹெட்மயர், முன்னாள் கேப்டன் ஜேசன் ஹோல்டர், கோட்ரல் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். இன்றைய ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Fri, 12/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை