சுவிஸ் தூதரக கடத்தல் நாடகத்தின் பின்னணியில் ஐக்கிய தேசிய கட்சி

சுவிஸ் தூதரக கடத்தல் சம்பவம் ஐக்கிய தேசிய கட்சியின் கற்பனை நாடகமாகும். வேறு நாடுகளுடன் குறிப்பாக மேற்குலக நாடுகளுடன் புதிய ஜனாதிபதி ராஜதந்திர உறவுகளை மேம்படுத்திக்கொள்ளும் முயற்சிகளை முறியடிக்கும் நோக்கத்திலேயே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா கூறியுள்ளார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறினார். அங்கு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதியின் இந்தியாவுக்கான முதலாவது அதிகாரபூர்வ விஜயம் வெற்றிகரமாக அமைந்தது. அதேநேரம் வல்லரசுகளிடையே அல்லது அரசியல் அதிகார சக்திகளுக்கிடையே இடம்பெறும் மோதல்களில் இலங்கை சிக்கிக்கொள்ளாது என்று வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியிருந்தார். இந்த நிலையில் சுவிஸ் தூதரகத்தின் கடத்தல் விவகாரம் நன்மை தரும் வகையில் உருவாகிவரும் ராஜதந்திர உறவுகளை சீரழிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கற்பனை நாடகம் என்று அவர் அங்கு கூறினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவருக்கு கிடைத்த வெற்றி ஆணையை முழுமையாக மக்களுக்கு பயன்தரும் வகையிலேயே பயன்படுத்துகிறார்.

அதன் முதலாவது விடயம் அமைச்சரவையை 158 ஆக குறைத்தமை. அதனையடுத்து அவரது வாகனப் பேரணியை 5 ஆக குறைத்தமை, வெளிநாட்டு பயணங்களின்போது முக்கிய பிரமுகர்களின் ஓய்விடத்தை பாவிக்காமல்விட்டமை, அதனைப் பாவிக்கும் முக்கிய பிரமுகர்கள் ஆயிரம் அமெரிக்க டொலர்களை கட்டணமாக செலுத்தவேண்டும். இது தொடர்பாக ஒரு சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கு மேலாக ஜனாதிபதியின் சூழல் மாசினை குறைக்கும் நோக்கம் இப்போது இளைஞர்களால் முன்னெடுக்கப்படுகிறது. அத்துடன் நாடு இப்போது புதிய யுகத்தை நோக்கி பயணிக்கிறது என்று அவர் அங்கு மேலும் கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிசாந்த அங்கு உரையாற்றுகையில், முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச எதிர்க் கட்சித் தலைவராக செயற்பட முடியாதுள்ளது. இதனால் பாராளுமன்றத்தில் பலமான எதிர்க் கட்சியொன்று இல்லாதுபோகும்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முன்னர் சஜித் பிரேமதாசவுக்கு ஹம்பாந்தோட்டை தொகுதியை வெற்றிபெறுமாறு அழைப்பு விடுக்கிறோம் என்று குறிப்பிட்டார்.

முன்னைய அரசாங்கத்தின் மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சீரற்ற முகாமைத்துவம் காரணமாக அபேக்ஷா வைத்தியசாலை பல கஷ்டங்களுக்கு ஆளானது.

இந்த மருந்து மாபியா தொடர்பாக பணிப்பாளர் வெளிப்படுத்தியுள்ளார் என்று அவர் அங்கு மேலும் கூறினார்.

Tue, 12/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை