ஒக்லாந்து பகிரங்க டென்னிஸ்: செரீனா, வொஸ்னியாக்கி இணைவு

ஒக்லாந்து பகிரங்க டென்னிசில் இரட்டையர் பிரிவில் செரீனா, வொஸ்னியாக்கி இணைகிறார்கள். இருவரும் இணைந்து ஜோடியாக ஆட இருப்பது இதுவே முதல் முறையாகும்.

முன்னாள் முதனிலை டென்னிஸ் வீராங்கனை டென்மார்க்கின் கரோலின் வொஸ்னியாக்கி அடுத்த மாதம் மெல்போர்னில் நடக்கும் (ஜனவரி 20-ம்திகதி முதல் பெப்ரவரி 2-ம்திகதி வரை) அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்து விட்டார்.

இந்த நிலையில் அதற்கு முன்பாக நியூசிலாந்தில் நடக்கும் ஒக்லாந்து பகிரங்க டென்னிஸ் போட்டியில் (ஜனவரி 6 முதல் 12 வரை) பங்கேற்க முடிவு செய்துள்ளார். அந்த போட்டியில் அவர் பெண்கள் இரட்டையர் பிரிவில் தனது தோழியும், 23 கிராண்ட்ஸ்லம் பட்டம் வென்ற சாதனையாளருமான செரீனா வில்லியம்சுடன் (அமெரிக்கா) இணைந்து விளையாட இருப்பதாக அறிவித்துள்ளார்.

செரீனா- வொஸ்னியாக்கி ஜோடி யாக ஆட இருப்பது இதுவே முதல் முறையாகும்.

Wed, 12/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை