அரைச் சொகுசு பஸ் சேவைகள் ரத்து

அரைச் சொகுசு பஸ்களின் சேவைகளை ரத்துச் செய்வதற்கு பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர கவனம் செலுத்தியுள்ளார்.

பயணிகளிடமிருந்து அதிக பணம் அறவிடப்படுகின்றபோதிலும் அதற்கேற்ப வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காததால் அரை சொகுசு பஸ் சேவை நீண்டகாலமாக பெரும் சர்ச்சைக்குள்ளாகி வருகின்றது.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து அமைச்சர் அதனை ரத்துச் செய்வது தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றார்.

அமைச்சு மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகளை சந்தித்து உரையாற்றியபோதே இவ்விடயம் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இதன்போது அரைச்சொகுசு பஸ்களின் கண்ணாடிகளுக்கு திரைச்சீலை போடப்பட்டிருப்பது மட்டுமே அதிலுள்ள ஒரேயொரு வித்தியாசம் என்றும் அதிகாரிகள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினர்.

ஏற்கனவே இது தொடர்பில் 10 ஆயிரம் பயணிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 100 சதவீதமான பயணிகள் அரைச் சொகுசு பஸ்களை ரத்துச் செய்ய வேண்டும் என்றே கூறியுள்ளனர்.

இவற்றை செவிமடுத்த அமைச்சர் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்துவதாக கூறினார்.

Tue, 12/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை