நீர், மின்துறைகளில் பல கோடி மோசடி; அதிகாரிகளும் தொடர்பு

இராஜாங்க அமைச்சர் வாசு குற்றச்சாட்டு

நீர்,மின்சாரம், அடங்கலான அநேக துறைகளுக்கு கிடைக்க வேண்டிய பல கோடி வரி வருமானம் செல்வந்தர்கள் மற்றும் வியாபாரிகள் சிலரால் மோசடி செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நீர் மீட்டரை மாற்றி பெருமளவு நிதியை நீர்ப்பாசன திணைக்களத்திற்கு இழக்கச்செய்த செல்வந்த வியாபாரிகளின் வியாபார நிலையங்கள் மற்றும் பணம்பெற்றுக் கொண்டு இவற்றுக்கு உதவிய மோசடி அதிகாரிகள் தொடர்பில் தகவல் கிடைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால் கட்டணம்செலுத்தவில்லையென்று நீர்ப்பாவனையாளர்களின் நீர் இணைப்பை துண்டிப்பதும் இதே அதிகாரிகள் தான்.கொழும்பு கிழக்கு நீர்ப்பாசன திட்டத்தில் 1,000 மில்லியன் ரூபா பாரிய மோசடி இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக  முழுமையான விசாரணை நடத்த இருக்கிறோம்.இதே போன்று மின்சாரம், வருமானம், தொழிலாளர் அடங்கலான துறைகளிலும் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இவை குறித்தும் அரசாங்கம் கவனம்செலுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

Wed, 12/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை