கட்சி ஒழுங்கை மீறிய சகல எம்.பிக்களையும் நீக்க நடவடிக்கை

எரிபொருள் விலைச் சூத்திரம் இரத்து

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கொள்கைகளுக்கு முரணாக செயற்பட்டு கட்சி ஒழுங்கை மீறிய சகல எம்.பிக்களினதும் கட்சி உறுப்புரிமையை இரத்துச் செய்வதற்கு சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுத்து வருவதாக ஐ.ம.சு.மு செயலாளரும் மின்சக்தி எரிசக்தி போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஏ.எச்.எம்.பௌசியை கட்சியிலிருந்து நீக்குவது தொடர்பான கடிதத்தில் தான் கையொப்பமிட்டுள்ளதாகவும் அவருக்கு தேவையானால் சட்ட உதவியை நாடமுடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு விஜயம் செய்த அவரிடம் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர்,

எரிபொருள் விலைச் சூத்திரத்தை இரத்துச் செய்ய முடிவு செய்துள்ள போதும் அமைச்சரவை பரிந்துரையுடனே அதனை செயற்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

கடந்த அரசாங்கத்தை போன்று எரிபொருள் விலைச் சூத்திரத்தை வைத்துக் கொண்டு மாதாந்தம் எரிபொருள் விலைகளை அதிகரிக்க தற்போதைய அரசு முயலாது. எரிபொருள் இறக்குமதி செய்யப்படுவதால் அதன் விலைகள் பற்றி உத்தரவாதம் வழங்க முடியாது. ஆனால் மக்கள் மீது சுமையேற்ற எமது அரசாங்கம் முயலாது.

எரிபொருள் சுத்திகரிப்புக்கு உலக தரத்திலான தொழில்நுட்ப உபகரணங்கள் பயன்படுத்தப்படுகிற போதும் அவற்றை இங்கு கொண்டுவர எந்த அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. எதிர்காலத்தில் அவற்றை தருவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். எதிர்வரும் வருடங்களில் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நவீனமயப்படுத்த வேண்டியது இன்றியமையாதது என்றும் அவர் கூறினார். எதிர்வரும் தேர்தலில் சுதந்திரக் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன கூட்டமைப்பும் ஒன்றாக எந்த பிரச்சினையும் இன்றி செயற்படும் என்றும் அவர் கூறினார்.

 

Wed, 12/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை