'லங்கா ராணி' அருளர் காலமானார்

ஈழப்போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவரும் ஈரோஸ் (EROS) இயக்கத்தின் தொடக்க கால உறுப்பினர்களில் ஒருவருமான அருளர் என அழைக்கப்படும் ரிச்சர்ட் அருட்பிரகாசம் யாழ்ப்பாணத்தில் நேற்றுக் காலமானார்.

இறக்கும்போது அவருக்கு வயது 71. 1980 களில் ஈழப்போராட்ட இயக்கங்களுக்கிடையில் பரஸ்பர உறவைக்கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட அருளர் “லங்கா ராணி” என்ற நாவலை எழுதியவர்.

லண்டன், இந்தியா, இலங்கை என எப்போதும் பயணங்களை மேற்கொண்டு அரசியல், சமூகப் பணிகளைச் செய்து கொண்டிருந்தவர், யுத்தத்தின் பின்னர் நாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தார்.

அவரது புதல்விகளில் ஒருவரான மியா, உலகப் புகழ்பெற்ற பாடகியாவார். அன்னாரது பூதவுடல் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள ஈசன்ஸ் அந்திமக் கிரியைகள் மண்டபத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு வவுனியாவிலுள்ள அவரது கன்னாட்டி பண்ணைக்கு எடுத்துச் செல்லப்படும்.

இறுதிக் கிரியைகள் வெள்ளியன்று இடம்பெறும்.

Wed, 12/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை