உலகப் போர் குண்டால் 54,000 பேர் வெளியேற்றம்

இத்தாலியின் பிருந்திசி நகரில் 2ஆம் உலகப் போரின்போது பிரிட்டனால் வீசப்பட்ட வெடி குண்டை செயலிழக்கச் செய்யும் பணி நடைபெறுவதையொட்டி, அந்நகரில் வசிக்கும் 54 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

பிருந்திசி நகரில் 1941ஆம் ஆண்டு வீசப்பட்ட குண்டு, அண்மையில் அங்குள்ள திரையரங்க சீரமைப்பு பணியின்போது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இயந்திரம் மூலம் அதை செயலிழக்கச் செய்யும் பணியில் இத்தாலி இராணுவ வீரர்கள் ஈடுபட்டனர்.

இதனால் முன்னெச்சரிக்கையாக குண்டு இருந்த பகுதியிலிருந்து 1617 மீற்றர் சுற்றளவு பகுதியில் வசிக்கும் 54 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர். அதேபோன்று உள்ளுர் விமான நிலையம், இரயில் நிலையம் மூடப்பட்டன.

Tue, 12/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை