ஆஸி 467 ஓட்டங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்து நியூஸிலாந்து தடுமாற்றம்

நியூஸிலாந்து - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

இதன்படி பதிலுக்கு முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் நியூஸிலாந்து அணி, நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், 2 விக்கெட்டுகளை இழந்து 44 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

ஆட்டநேர முடிவில், ரோஸ் டெய்லர் 2 ஓட்டங்களுடனும், டொம் லதம் 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளனர்.

இதற்கமைய அவுஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், நியூஸிலாந்து அணி 423 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

மெல்பேர்ன் மைதானத்தில் நேற்றுமுன்தினம் ஆரம்பமான இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய அவுஸ்ரேலிய அணி, முதல் இன்னிங்ஸிற்காக 467 ஓட்டங்களை குவித்தது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ட்ராவிஸ் ஹெட் 114 ஓட்டங்களையும், ஸ்டீவ் ஸ்மித் 85 ஓட்டங்களையும், டிம் பெய்ன் 79 ஓட்டங்களையும், மார்னஸ் லபுஸ்சகன் 63 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், நெய்ல் வாக்னர் 4 விக்கெட்டுகளையும், டிம் சவுத்தீ 3 விக்கெட்டுகளையும், கொலின் டி கிராண்ட்ஹோம் 2 விக்கெட்டுகளையும், ட்ரென்ட் போல்ட் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய நியூஸிலாந்து அணி, நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 44 ஓட்டங்களை பெற்றது.

நியூஸிலாந்து அணி சார்பில், டொம் பிளெண்டல் 15 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 9 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில், பெட் கம்மின்ஸ் மற்றும் ஜேம்ஸ் பெட்டின்சன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இன்னும் 8 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் மூன்றாவது நாளை நியூஸிலாந்து அணி இன்று தொடரவுள்ளது.

Sat, 12/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை