அரச படையின் தாக்குதலால் 235,000 மக்கள் வெளியேற்றம்

சிரிய கிளர்ச்சியாளர் பகுதி மீது:

சிரியாவின் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு இத்லிப் மாகாணத்தில் அரச படை தமது தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில் அங்கிருந்து 235,000க்கும் அதிகமானவர்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி இருப்பதாக ஐ.நா குறிப்பிட்டுள்ளது.

மோதல்கள் உக்கிரமடைந்திருக்கும் நிலையில் கடந்த டிசம்பர் 12 மற்றும் 25 ஆம் திகதிக்குள் இந்த வெளியேற்றங்கள் இடம்பெற்றுள்ளது.

சிரியாவின் வடமேற்கு பகுதியில் இருக்கும் இத்லிப் பிராந்தியமானது சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசுக்கு எதிராக போராடும் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி பிரதான நிலப்பகுதியாகும்.

கடந்த நவம்பர் பிற்பகுதி தொடக்கம் இத்லிப் மீது ரஷ்ய ஆதரவு சிரிய அரச படை குண்டு வீசி வருகிறது. டிசம்பர் நடுப்பகுதி தொடக்கம் இங்கு வான் மற்றும் தரைவழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளது பொதுக்கள் வெளியேறத் தூண்டி இருப்பதாக ஐ.நா மனிதாபிமாக நிறுவனம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மற்றும் உள்நாட்டு யுத்தத்தால் ஏற்கனவே பல தடவைகள் இடம்பெயர்ந்து இருப்பவர்கள் டிரக் வண்டிகள் மற்றும் தனிப்பாட்ட கார்கள் மூலம் வடக்கை நோக்கி பயணித்து வருகின்றனர்.

அரச படையின் தாக்குதல்களால் மாராத் அல் நுமார் மற்றும் அருகாமை தெற்கு இத்லிப் பிராந்தியங்கள் கிட்டத்தட்ட காலியாகி இருப்பதாக ஐ.நா மனிதாபிமாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இடம்பெயரும் பெரும்பாலான மக்கள் இத்லிப்பின் வடக்கு பகுதி மற்றும் அண்டைய அலெப்போ மாகாணத்தில் உள்ள நகரங்கள் மற்றும் அகதி முகாம்களை நோக்கி சென்று வருவதாக கூறப்படுகிறது.

Mon, 12/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை