1000 தொழில்நுட்ப டிப்ளோமாதாரிகளை உருவாக்க திட்டம்

மொறட்டுவபல்கலைக்கழகத்திற்கு இணைந்ததான தொழில்நுட்ப நிறுவனத்தின் கீழ் தகவல் தொழில்நுட்ப சான்றுப்பத்திரம் அல்லது டிப்ளோமா கற்கைநெறிக்கு 1000 சந்தர்ப்பத்தை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தற்பொழுது உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியில் ஆக கூடுதலான கோரிக்கை உள்ள மென்பொருள் தயாரிப்பு இணையத்தளத்தை அடிப்படையாக கொண்ட தொழில்வாய்ப்பு போன்ற தகவல் தொழிலுக்கான சந்தர்ப்பத்திற்கான தகவல் தொழில்நுட்ப துறையில் தொழில் வர்த்தக சந்தையை இலக்காக கொண்டு தொழில்நுட்ப கற்கைநெறிகள், ஏனைய கற்கைநெறிகளை கற்கும் அல்லது உயர்தரத்தில் சித்தி எய்திய மாணவர்களுக்கு சான்றிதழ் பத்திரம்/டிப்ளோமா/  உயர் டிப்ளோமா கற்கைநெறிக்கான பயிற்சி சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுப்பதற்கான துரிதமான வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டம் 2020 ஆம் ஆண்டில் 1000 பேருக்காக ஆரம்பிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டளவில் பயிற்சிக்கான சந்தர்ப்பத்தை 3,000 ஆக அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் இணைந்த தியகம தொழில்நுட்ப நிறுவனத்தை அடிப்படையாக கொண்டு அங்கு கற்கைநெறிகளை நடத்துவதற்கும் கற்கைநெறிகளை வகுப்பதற்குமாக அரச மற்றும் தனியார் பிரிவுகளில் சேவையில் ஈடுபட்டுள்ள தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த நிபுணர்களைக்கொண்ட குழுவின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கும் உயர் கல்வி தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கள் அமைச்சர்  சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை கொள்கை ரீதியில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Thu, 12/19/2019 - 14:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை