SLTA Tennis டென்ஸ் விளையாட்டு போட்டிக்கு புத்துயிரளிக்கும் ரிட்ஸ்பரி

எதிர்காலவிளையாட்டு வீரர்களை வலுப்படுத்தும் வகையில் தளராது செயற்பட்டு வருகின்ற சுவை ரிட்ஸ்பரி தேசத்தில் வளர்ந்துவருகின்ற டென்னிஸ் விளையாட்டு வீரர்களை விருத்தி செய்யஉதவும் பயணத்தை ஆரம்பிப்பதற்கு இலங்கை டென்னிஸ் சங்கத்துடன் கைகோர்த்துள்ளது. கனிஷ்ட டென்னிஸ் வீரர்கள் முன்னெடுப்பு , 1998 ஆம் ஆண்டில் சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் மற்றும் இலங்கை டென்னிஸ் சங்கம் ஆகியவற்றால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு செயற்திட்டமாகும். அன்று தொட்டு,உள்நாட்டு டென்னிஸ் அரங்கில் திறமை மிக்க பல டென்னிஸ் வீரர்களை இந்நிகழ்ச்சித்திட்டம் உருவாக்கியுள்ளது.

நாடளாவிய ரீதியில் SLTA இன் பிராந்தியமையங்களினூடாக அவர்களின் முழுமையான வழிகாட்டலின் கீழ் இந்நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிகழ்ச்சித்திட்டம் தற்சமயம் 10 பிராந்தியங்களில் நடாத்தப்பட்டு வருவதுடன்,2020 ஆம் ஆண்டில் மேலும் 03 பிராந்தியங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பிராந்தியரீதியான ‘B Division போட்டிகளின் தகுதிகாண் இறுதிப்போட்டிகள் நவம்பர் 01 ஆம் திகதிஆரம்பமாகியுள்ளதுடன்,‘A Division’ போட்டிகள் SLTA வளாகத்தில் நேற்று 08 ஆம் திகதி ஆரம்பமானது.

இலங்கை டென்னிஸ் சங்கத்தின் தலைவரான இக்பால் பின் ஐசக் இது தொடர்பில் கருத்துவெளியிடுகையில்,'இந்த ஆண்டு நிகழ்வில் 1,800 ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் பங்குபற்றவுள்ளனர். நாட்டின் அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கும் வகையில் பத்துபிராந்தியங்கள் இதில் பங்குபற்றவுள்ளதுடன்,நாட்டில் இடம்பெறுகின்றமிகப் பாரிய அளவிலான டென்னிஸ் சுற்றுப்போட்டியாகவும் இது மாறியுள்ளது. டென்னிஸ் வீரர்களின் அனுபவத்தை மேம்படுத்தி, இந்தவிளையாட்டின் எதிர்காலத் தலைமுறையைவிருத்திசெய்வதற்கு SLTA உடன் பங்காளராக இணைந்துள்ளமைக்காக ரிட்ஸ்பரி இன் முன்னெடுப்பினைநாம் போற்றுகின்றோம்,'என்று குறிப்பிட்டார்.

‘Cool Tennis Kids Play’ நிகழ்வானதுமுதன்முதலாக 2011 ஆம் ஆண்டில் இடம்பெற்றதுடன்,நாடெங்கிலுமிருந்து 60 பாடசாலைகளைச் சேர்ந்த 400 ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் இதில் பங்குபற்றியுள்ளனர். RED (7/கீழ்) , ORANGE (8/கீழ்) மற்றும் GREEN (10/கீழ்) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் இந்நிகழ்வு இடம்பெறுகின்றது.

CBL Foods International நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் துறை பொது முகாமையாளரான நிலுபுல் டி சில்வா இந்நிகழ்வில் உரையாற்றுகையில்,'உள்நாட்டு விளையாட்டுத்துறைக்கு பாரிய ஆதரவு தேவைப்படு கின்ற ஒருதருணத்தில் SLTA உடன் பங்காளராக இணைந்துள்ளமை எமக்கு பெருமகிழ்ச்சிஅளிக்கின்றது.

இளம் தலைமுறை தமது திறமைகளை மேம்படுத்தி, இலங்கையில் டென்னிஸ் விளையாட்டை அபிவிருத்திசெய்யும் முயற்சியில் அடிமட்ட திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கு உதவுவது நாம் பெருமைப்பட வேண்டிய தருணமாக உள்ளது. விளையாட்டைபாரியஅளவில் ஊக்குவிப்பதற்கு வர்த்தக நாமங்களின் பங்குடமைகள் தேவையாக காணப்படுவதுடன்,வளர்ந்து வருகின்ற வீரர்களின் தரா தரங்களை மேம்படுத்தி,மேலதிக வாய்ப்புக்களைத் தோற்று விப்பதற்கு அது அவசியமாகும்,'என்று குறிப்பிட்டார்.

தரைமுதல் தண்ணீர் விளையாட்டுக்கள் வரைகளத்திலும்,நீர் சார்ந்தவிளையாட்டுக்களிலும் ரிட்ஸ்பரி அங்கம் வகித்துவருகின்றது. ஸ்குவாஷ்,நீச்சல்,ரக்பி மற்றும் தடகள விளையாட்டுக்கள் என பலதுறைகளை வலுவூட்டி,அடுத் ததலை முறை நட்சத்திரங்களை வளர்ப்பதற்கான களத்தினை அதுஏற்படுத்திவருகின்றது.

தனது தூய சொக்லட் சுவை மூலமாக இளம் தலை முறையின் சுவையரும்புகளை ரிட்ஸ்பரி மீட்டி வருகின்றது. இன்று அவர்களின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பி,பிரகாசிக்கச் செய்யும் களத்தை அமைத்துக் கொடுத்து அவர்களின் இதயங்களை ஈர்க்கும் வகையில் அது செயற்பட்டு வருகின்றது.

Sat, 11/09/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக