முஸ்லிம்களின் பாதுகாப்புக் கருதியே சஜித்தை ஆதரிக்க முடிவு செய்தோம்

மொட்டுக்கட்சியின் கூலிப்படைகளுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப் போவதில்லை

முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக செயற்பட்ட இனவாதிகள் எல்லோரும் எங்கு இருக்கிறார்கள் என்பதை அடையாளம் கண்ட பின்னரே சஜித் பிரேமதாசவை ஆதரிக்க மு.கா.தீர்மானித்தது. இந்த முடிவுக்கு கட்சியினர் நிச்சயமாக கட்டுப்பட வேண்டுமென மு.கா தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மொட்டுக்கட்சியின் கூலிப்படைகளுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப் போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து புத்தளம் நகரில் (07) இரவு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

கூட்டத்தில் தொடர்ந்தும் பேசிய அமைச்சர்,..

கொழும்பு குப்பை விவகாரம் இன்று ஒரு தேசிய பிரச்சினையாக மாறியிருக்கிறது. கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை தொன் கணக்கில் புத்தளத்தில் கொட்டுவது என்பது அந்த மக்களுக்கு செய்யும் பாரிய அநீதி. குப்பை விவகாரம் பெரும் பிரச்சினையாக காணப்படுவதால் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளதைப் போல இலங்கையில் எல்லா மாவட்டங்களிலும் திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவுகளை அமைத்து குப்பை பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சஜித் உறுதியளித்துள்ளார்.

முஸ்லிம் மக்களையும், கிறிஸ்தவ மக்களையும் மோதவிட்டு அதன்மூலம் இந்த நாட்டில் ஒரு ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர எடுத்த முதல் முயற்சிதான் ஏப்ரல் தாக்குதலாகும். இதனால் முஸ்லிம் சமூகத்தின் மீது சேறுபூசும் பல நடவடிக்கைகள்

கடந்த கால ஆட்சியாளர்களின் மீள்வருகை எமக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதனையும் கவனத்தில் கொண்டுதான் எமது கட்சி ஒரு தீர்க்கமான முடிவை எடுத்தது.

இரண்டாவது வாக்கை சஜித்துக்கு வழங்குவது சம்பந்தமாக தேசிய மக்கள் சக்தி இயக்கத்திற்கு அதரவு வழங்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர் சில தினங்களுக்கு முன்னர் என்னை சந்தித்து ஆலோசனை பெறவேண்டும் என்று நண்பர் ஒருவர் மூலம் அனுமதி கேட்டிருந்தார். முதலாவது வாக்கு பற்றி பேசுவது என்றால் வருமாறும் இரண்டாவது வாக்கு பற்றிய பேச்சுக்கே இடமில்லை என்று பதில் கூறினேன்.

இரண்டாவது வாக்கு என்பது சஜித் பிரேமதாசவை தோற்கடிப்பதற்கான வியூகமே தவிர அதில் எவ்வித பிரயோசனமும் கிடைக்கப்போவதில்லை என்றார்.

கற்பிட்டி தினகரன் விசேட நிருபர்

 

Sat, 11/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை