வடக்கு பட்டதாரிகளுக்கு மிக விரைவில் நியமனம்

ஜனாதிபதித் தேர்தல் காரணமாக வடமாகாணத்தில் இடைநிறுத்தப்பட்ட பட்டதாரிகளுக்கான நியமனங்களை மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் வேலையில்லாப் பட்டாதாரிகள் சிலர் நேற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அவரது அமைச்சில் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதித் தேர்தலின் நிமித்தம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனையின் பிரகாரம் வடமாகாணத்தில் வழங்கப்படவிருந்த பட்டதாரி நியமனங்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. அதனைப் பெற்றுக்கொடுக்க நான் கட்டாயம் நடவடிக்கையெடுப்பேன்.
தேர்தலின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நிராகரித்திருந்தனர். ஆனால், அவர் தனது முதலாவது உரையிலேயே தமிழ் பேசும் மக்களுக்கு அபிவிருத்தியில் உரிய பங்கீடு வழங்கப்படுமென கூறியிருந்தார். அத்துடன், எனக்கு மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சையும் கொடுத்திருந்தார். ஆகவே, கட்டாயம் பட்டதாரிகளுக்கு நியமனங்களைப் பெற்றுக்கொடுப்பேன் என்றார்.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 11/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை