நல்லாட்சி அரசின் காலத்தில் அரசுக்கு ரூ. 3,360. பில். நட்டம்

மின்சார துறையில் பாரிய ஊழல் மோசடி

நாட்டில் கடந்த காலத்தில் காணப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் மின்சார உற்பத்தித் துறையில் மேற்கொண்ட ஊழல் மோசடி மற்றும் முறையற்ற வேலைத் திட்டங்களால் அரசாங்கத்திற்கு 3,360 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக மின்சார நுகர்வோர் சங்கம் தெரிவிக்கின்றது.

நேற்றைய தினம் மேற்படி முறைகேடான செயற்பாடு தொடர்பாக அச் சங்கத்தினர் நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை செய்தனர். 2015ஆம் ஆண்டு முறைப்படி மற்றும் சட்டப்படியான அனுமதியுடனான, நாட்டுக்கு இலாபம் தரக்கூடிய LNG மின்சார உற்பத்தி திட்டத்தை கடந்த அரசாங்கம் தன்னிச்சையாக தாமதப்படுத்தி பெருமளவு விலைக்கு மின்சாரத்தை பெற்றுக் கொண்டதன் மூலம் பெரும் தொகையை மின்சார சபை இழக்க நேரிட்டதாக சங்கத்தின் செயலாளர் சஞ்ஜீவ தம்மிக்க தெரிவித்தார்.

மேற்படி இலாபமீட்டக்கூடிய மின் உற்பத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் அவசர தேவைக்காக 35 மற்றும் 45 ரூபாவிற்கு ஒரு

அலகு மின்சாரத்தை பெற்று நல்லாட்சி அரசாங்கம் மின்சார சபைக்கு நட்டத்தை ஏற்படுத்தியது. அத்துடன் மின்சார துண்டிப்பு காரணமாக நாட்டிற்கு பில்லியன் கணக்கில் நட்டமும் அத்துடன் நிதி மோசடியும் அந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டது. இதனால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உடனடி கவனம் செலுத்தி விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். முறையற்ற விதத்தில் செயற்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். என ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொண்டுள்ளார். மின்சாரத்தை நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் சஞ்ஜீவ தம்மிக்க உள்ளிட்ட பிரதிநிதிகள் அந்த முறைப்பாட்டை நேற்றுஆணைக்குழுவில் முன்வைத்துள்ளனர்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 11/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை