ஜனாதிபதி கோட்டாபயவுக்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் வாழ்த்து

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியின் ஆங்கில மொழிபெயர்ப்பை ரஷ்யாவிலுள்ள இலங்கைத் தூதரகம் அனுப்பியுள்ளது. அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,..-

இலங்கை, ரஷ்ய நாடுகளுக்கிடையிலான உறவு பாரம்பரியமானது. நாட்டின் தலைவர் என்ற வகையில் நீங்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகள் நாடுகளின் இரு தரப்பு உறவை மேலும் பலப்படுத்தும் அதேநேரம் அனைத்து கோணங்களிலுமான செயற்பாட்டை பயனுள்ளதாக்குமென நம்புகின்றேன்.

எமது நாடுகளுக்கிடையிலான நட்பு மக்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் அதேநேரம் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதாக அமையும். உங்களின் வெற்றிக்காக நான் வாழ்த்துகின்றேன் என்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 

Sat, 11/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை