மெக்டொனால்ட் தலைமை செயல் அதிகாரி பணி நீக்கம்

ஊழியருடன் தொடர்பு:

மெக் டொனால்ட் நிறுவனம் அதன் தலைமை செயல் அதிகாரியான ஸ்டீவ் ஈஸ்டர்ப்ரூக்கை பணி நீக்கம் செய்துள்ளது. அவர் ஊழியர் ஒருவருடன் உறவில் இருந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரபல துரித உணவு நிறுவனமான மெக் டொனால்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக கடந்த 2015ஆம் ஆண்டு ஸ்டீவ் ஈஸ்டர்ப்ரூக் நியமிக்கப்பட்டார். அண்மையில் அந்நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்த விசாரணையில், தன் மீதுள்ள தவறை ஸ்டீவ் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் நிறுவனம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாகத் தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட 52 வயதான ஸ்டீவ், ஏற்கனவே விவகாரத்து ஆனவர். அவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும், 1993ஆம் ஆண்டு முதல்அவர் மெக்டொனால்ட் குழுமத்தில் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tue, 11/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை