பலஸ்தீனர் மீது பின்புறமாக சுடும் வீடியோவால் பரபரப்பு

நிராயுதபாணியாக இருந்த பலஸ்தீனர் ஒருவரின் மீது பின்புறமாக துப்புக்கிச் சூடு நடத்தும் வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் பரவியதை அடுத்து அந்த தாக்குதலை நடத்திய இஸ்ரேலிய எல்லை காவல் பொலிஸார் இடைநிறுத்தப்பட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாக இஸ்ரேலிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இஸ்ரேலின் ‘சென்னல் 13’ தொலைக்காட்சி கடந்த சனிக்கிழமை வெளியிட்ட இந்த வீடியோவில், ஜெரூசலம் முனையில் இருந்து மேற்குக் கரை சோதனைச்சாவடி ஒன்றில் பலஸ்தீனர் ஒருவரை பின்பக்கமாக திரும்பும்படி எல்லை காவல் வீரர் ஒருவர் உத்தரவிடுகிறார்.

தொடர்ந்து திரும்பிச் செல்லும் பலஸ்தீனரை நோக்கி துப்பாக்கியை நீட்டும் எல்லை காவல் வீரர் சூடு நடத்துவது பதிவாகியுள்ளது. இதனை அடுத்து வலியால் அந்த பலஸ்தீனர் கீழே விழுவது பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றது என்று குறிப்பிட்ட இஸ்ரேலிய பொலிஸ் பேச்சாளர் மிக்கி ரொசன்பெல்ட், நீதி அமைச்சு இது பற்றி விசாரணை ஆரம்பித்திருப்பதாக தெரிவித்தார்.

Tue, 11/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை