பூஜித, ஹேமசிறி மேன்முறையீட்டு மன்றில் பிணை மனு தாக்கல்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை பிணையில் செல்ல உத்தரவிட வேண்டுமென்று மேன்முறையீட்டு நீதிமன்றில் சீராய்வு மனுவொன்றை அவர்கள் தரப்பு சட்டத்தரணிகள் தாக்கல் செய்துள்ளனர்.

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய கொழும்பு பிரதான

நீதவான் நீதிமன்றம் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகிய இருவரையும் பிணையில் செல்ல உத்தரவிட்டது.

எனினும் கொழும்பு மேல் நீதிமன்றம் அந்த கட்டளையை மாற்றி அவர்கள் இருவரையும் எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டது.

இந் நிலையிலேயே அவர்கள் இருவரும் தமது சட்டத்தரணிகள் ஊடாக மேற்படி சீராய்வு விண்ணப்பத்தை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். தங்களை பிணையில் செல்ல நீதிமன்றம் எந்த நிபந்தனை உரியதென கருதுகிறதோ அந்த நிபந்தனையின் பேரில் பிணையில் செல்ல இடைக்கால உத்தரவொன்றை பிறப்பிக்க வேண்டுமென மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு தாக்கல் செய்துள்ள சீராய்வு விண்ணப்பத்தில் இருவரும் கேட்டுள்ளனர்.

 

Fri, 11/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை