ட்விட்டரில் அரசியல் விளம்பரங்களுக்கு தடை

சமூக ஊடக நிறுவனமான ட்விட்டர் அரசியல் ரீதியான விளம்பரங்களை உலக அளவில் தடை செய்யவுள்ளது.

சமூக ஊடகங்களில் அரசியல்வாதிகளால் பதிவிடப்படும் தவறான தகவல்கள் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தவறான தகவல்களும் போலியான செய்திகளும் பரவுவதைத் தவிர்க்க அரசியல் ரீதியான விளம்பரங்களைத் தடைசெய்ய முடிவெடுத்ததாக ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜக் டோர்சி தெரிவித்தார்.

ட்விட்டர் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான பேஸ்புக் அரசியல் விளம்பரங்களுக்கான தடையை அண்மையில் நீக்கியது.

அரசியல் விளம்பரங்கள்தான் பெரிய அளவில் சம்பாதிக்கமுடியும் என்ற நிலை இல்லை என்ற பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க் அனைவருக்கும் கருத்துகளைப் பகிர தளத்தைத் தருவது அவசியம் என்றார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்கத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு சமூக ஊடகங்கள் கூர்மையாகக் கவனிக்கப்படுகின்றன.

ட்விட்டரின் தடை அடுத்த மாதம் 22ஆம் திகதி நடப்புக்கு வரும் என்றும் நவம்பர் 15ஆம் திகதிக்குள் அது குறித்த முழு விபரங்கள் பகிரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Fri, 11/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை