சட்டத்தரணி அலிசப்றிக்கு எதிராக நஷ்டஈடு கோரி ஹரீன் வழக்கு தாக்கல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தானும் தனது தந்தையும் முன்கூட்டியே அறிந்திருந்ததாக ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்றி கூறியிருக்கும் போலித் தகவலுக்கு எதிராக அர் மீது 500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யவிருப்பதாக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ நேற்று அறிவித்தார்.

"உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து இடம்பெற்ற முழுமையான தகவல்களை நான் ஏற்கனவே விபரித்துள்ளேன். ராஜபஷக்களே தங்களது ஆட்சிக்காலத்தில் சஹரானை வளர்த்து விட்டமை தற்போது தெட்டத் தெளிவாகியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஒரு வாரத்தில் நாடு ஆபத்தில் இருப்பதாகவும் தான் நாட்டை பொறுப்பெற்க்க வேண்டுமென்றும் அவர் அறிவித்தார். இவையனைத்தும் அவர்களின் நீண்டகாலத் திட்டத்தின் விளைவால் உருவானவை," என்றும் அவர் தெரிவித்தார்.

கோட்டாபயவின் பிரஜாவுரிமை தற்போது மீண்டும் பிரச்சினைக்குள்ளாகியுள்ளது.2019 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் காலாண்டின் பிரஜாவுரிமை நீக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலில் கோட்டாபயவின் பெயர் இல்லையென்றும் அவர் கூறினார்.

" இது தொடர்பில் கோட்டாபயவின் தரப்பினரிடம் கேட்டபோது மூன்றாம் காலாண்டுக்கான பெயர் பட்டியல் வரும் வரை காத்திருக்குமாறு கூறினார்கள். ஆனால் தற்போது அப்பட்டியலிலும் அவருடைய பெயர் இல்லை.அதற்கான ஆவணங்கள் இருப்பதாக அலி சப்றி உறுதியளிப்பாராயின் அவர் அதனை ஊடகங்களுக்கு வெளியிட முடியும். இதில் பொய் இல்லையென்றால் எதற்காக இவ்விடயம் தொடர்பில் அவரது கட்சியினர் இழுத்தடித்து மூடி மறைக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை இதில் ஏதோ உள்ளது. அமெரிக்கத் தூதரகம் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். அமெரிக்க தூதரகம் இவ்விடயத்தில் தலையிடாவிட்டால் சோஃபா ஒப்பந்தத்தின் தூதுவராக கோட்டாபயவை அவர்கள் பயன்படுத்துகின்றார்களா என்ற கேள்வி எமக்குள் எழுந்துள்ளது," என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் இலங்கைப் பிரஜையான சமல் ராஜபக்ஷவுக்கு பதிலாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்தல் களத்தில் இருப்பது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். அத்துடன் கோட்டாவின் தேர்தல் மேடையை முன்னெடுத்துச் செல்லும் பந்து சமரசிங்க மற்றும் அனுஷா தமையந்தி குறித்து இந்நாட்டிலுள்ள கல்விமானக்ள சற்று சிந்திக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்ெகாண்டார்.

கோட்டாபய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கைப்பொம்மை என்பதை மக்கள் அறிவார்கள். அத்துடன் சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தை நன்கு வாசித்து ஆராய்ந்ததன் பின்னரே அவருக்கு வாக்களிக்க மக்கள் தீர்மானித்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"தில்ஷான் பத்திரன விடுத்துள்ள சவாலை ஏற்றுக்ெகாள்ள நான் தயாராகவுள்ளேன். எமது வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆட்சிக்கு வந்தால் நான் பதுளையில் வாக்குறுதியளித்ததற்கமைய எனது சம்பளத்தை எடுக்க மாட்டேன்," என்றும் அவர் தெரிவித்தார்.

Tue, 11/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை