அம்பாறை, மட்டு மாவட்டங்களில் அடைமழை; பல பகுதிகளில் வெள்ளம்

சாகாமம், கிரானில் கூடுதல் மழை வீழ்ச்சி

வெல்லாவெளி தாம்போதி

வட கிழக்கு பருவப் பெயர்ச்சி மழையுடனான காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தற்போது பலத்த மழையுடனான காலநிலை நிலவி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக தாழ்நிலப் பிரதேசங்கள் மற்றும் வீதிகள் பல நீரில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் அம்பாறை மாவட்டத்தின் சாகாமம் பிரதேசத்தில் 76.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. பதியத்தலாவ பிரதேசத்தில் 56.7 மிலிலி மீற்றர் மழை வீழ்ச்சியும், றூபஸ் குளம் பகுதியில் 45.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பாணம பிரதேசத்தில் 43.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், லகுகல பகுதியில் 42.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், தீகவாபி பிரதேசத்தில் 37.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், அக்கரைப்பற்று பிரதேசத்தில் 33.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அலுவலகம் தெரிவிக்கின்றது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் கிரான் பிரதேசத்தில் அதி கூடியதாக 130.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்தார்.

 

அட்டாளைச்சேனை தினகரன், காரைதீவு குறூப் நிருபர்கள்

Wed, 11/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை