54 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரச துறை தொழில்வாய்ப்பு

கோட்டாபய ராஜபக்‌ஷ

54 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளையும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப் போவதாக பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார்.நாட்டை கட்டியெழுப்பும் செயற்பாட்டில் புத்திஜீவிகளுக்கு உரிய இடம் வழங்கப்படும் என்று கூறிய அவர்

அறிவுசார்ந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தன்னை அர்ப்பணிக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாத்தறையில் இடம்பெற்ற கோட்டாபய ராஜபக்‌ஷவின் இறுதிப் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் உரையாற்றுகையில்,

கல்வித் துறையில் புதிய புரட்சியொன்றை ஏற்படுத்தி தொழில் அடிப்படையான கல்வி முறையொன்றை அறிமுகம் செய்ய இருக்கிறேன். தொழில்நுட்ப துறையில் 3 இலட்சம் தொழில் வாய்ப்புகள் இருந்தாலும் அதற்கு தகமையுள்ள இளைஞர் யுவதிகள் நாட்டில் கிடையாது. நவீன தொழில்நுட்பம், கம்பியூட்டர் அறிவு என்பவற்றை எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு பயன்படுத்த எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பேன்.

தொழில்நுட்ப ஆய்வு கூடங்களை அமைக்க அடுத்த வருடம் முதல் நடவடிக்கை எடுப்பேன்.

அரச துறையில் ஒரு இலட்சம் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. தொழில் தகமை தேவையில்லாத துறைகளுக்கும் கல்வித் தகமை தேவைப்படுகிறது. இவற்றை வறியவர்களுக்கு வழங்க வேண்டும். நாம் கல்வித் தகமை அவசியத்தை நீக்கி ஒவ்வொரு வறிய குடும்பத்திற்கும் தலா ஒரு தொழில் வாய்ப்பை வழங்குவோம் என்றார்.(பா)

Thu, 11/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை