வடக்கின் சுகாதார அபிவிருத்திக்கு ரூ.35,000 மில். செலவு

கடந்த மூன்று வருடங்களில் வடக்கின் சுகாதார அபிவிருத்திக்கு மாத்திரம் 35,000 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதென்றும் அடுத்த வருடம் கிளிநொச்சி வைத்தியசாலையில் மகப்பேற்று விடுதித் தொகுதியொன்றும் அவசர சிகிச்சைப் பிரிவொன்றும் அமைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

வட மாகாண மாங்குளம் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே இதனை அமைச்சர் தெரிவித்தார்.

வட மாகாண வைத்தியசாலைகளில் அபிவிருத்திக்காக நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்ட செயல்திட்டங்கள் தொடர்பாகவும் அமைச்சர் விபரித்தார். நாம் கிளிநொச்சியில் மகப்பேற்று தொகுதியொன்றை அமைக்கவுள்ளோம் என்றார்.

Wed, 11/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை