‘ரொதர்ஹேம் சர்கிட் மீட் 2019’ கார்,மோட்டார் சைக்கிள் போட்டி

விமானப்படை மகளிர் சேவைப் பிரிவின் அபிவிருத்தியின் நிமித்தம் ஏற்பாடு செய்திருந்த ‘ரொதர்ஹேம் சர்கிட் மீட் 2019’ க்கான சாகசம் நிறைந்ததும் உத்வேகமானதுமான விளையாட்டுகளைப் பிரதிபலிக்கும் முகமாக நடத்தப்பட்ட போட்டி நிகழ்வு கட்டுகுருந்த விமானப்படை முகாமில் கடந்த மாதம் 24ம் திகதி நிறைவடைந்தன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசுகள், விருதுகளை வழங்கினார்.

கட்டுகுருந்த விமானப்படை முகாமில் விமான ஓடுபாதை மோட்டார் கார், மோட்டார் சைக்கிள் போட்டி நடைபெறும் பிரதான இடமாக பிரசித்தி பெற்றுள்ளது.

இங்கு நடைபெற்ற தேசிய ஓட்டுநர்களின் சாகச விளையாட்டுக்களைக் காண பெருந்தொகையான பொது மக்கள் கூடியிருந்தனர்.

2019 ரொதர்ஹேம் சர்கிட் மீட் தொடரில் சிறந்த மோட்டார் கார் ஓட்டுநருக்கான விருதை அஷான் சில்வா பெற்றுக்கொண்டதுடன் சிறந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கான விருதை ஷோயேல் டேனியல் பெற்றுக்கொண்டார்.

இப்போட்டிகளைக் காண விமானப்படை மகளிர் சேவை பிரிவின் தலைவர் மயூரி பிரபா டயஸ், விமானபடை தொழில்நுட்ப நிர்வாக அதிகாரியும், மோட்டார் வாகன விளையாட்டு சங்கத் தலைவருமான எயார் வைஸ் மார்ஷல் அன்ட்ரு விஜேசூரிய, விமானப்படை நிர்வாக சபை அதிகாரிகளும், விமானப்படை வீரர்களும் பெரும் திரளான பொதுமக்களும் கூடியிருந்தனர்.

Wed, 11/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை