துப்பறியும் சினிமா The whait hows

திரைப்படங்கள் கொண்டிருக்கின்ற கதையரசியல் என்பது மிக முக்கியமானது. ஒரு சினிமா காட்சிப்படுத்தும் விடயப்பரப்பின் மீது ஏகப்பட்ட கதையாடல்கள் உருவாகுவதினை நாம் அவதானிக்க முடியும். எப்பொழுதும் சினிமாவானது தனக்கான புதிய நுட்பங்களை திரையில் அறிமுகப்படுத்திய படியே இருக்கும். ஒரு கால கட்டத்தில் வெறும் காட்சி நகர்த்தலாக அறியப்பட்ட சினிமா தளத்தினில் புதுமையான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிய புதிய அலை காலகட்டமானது சினிமா கலாசாரத்தை புதுமையான பாதைக்கு இட்டுச் சென்றது.

மரபு ரீதியான சினிமா கட்டமைப்பினை உடைத்து புதிய கதையாடல்களையும், கவித்துவமிக்க காட்சியமைப்புக்களையும் புதிய அலை இயக்குனர்கள் சினிமாவிற்குள் புகுத்தத் தொடங்கினர்.  

அமெரிக்க இயக்குனரான ரோமன் பொலான்ஸ்கியினால் 1974ஆம் ஆண்டு இயக்கப்பட்டு சினிமா உலகிற்கு புதியதொரு பாய்ச்சலினை வழங்கிய திரைப்படம்தான் The whait hows துப்பறியும் உளவாளி ஒருவனின் கதையினை மையமாகக் கொண்ட இத்திரைப்படம் ஊழல் மீதான வெளிப்படை பார்வையினைக் கொண்ட படைப்பாகும்.

மிக நேர்த்தியான நடிகர்களின் நடிப்பு முறையும், சினிமாவின் அழகியலை நுட்பமாக நகர்த்திச் செல்லும் ஒளிப்பதிவு முறையும் இத்திரைப்படத்தின் வெற்றிக்கான மிகப் பெரும் காரணியாகும். விசித்திரமான காட்சி அமைப்புக்களை இத்திரைப்படத்தில் கைவசப்படுத்தியிருப்பார் இயக்குனர்.

வித்தியாசமான வசனங்கள், நெறிப்படுத்தப்பட்ட கதாபாத்திரங்கள், கட்டமைக்கப்பட்ட கதை கூறும் முறைகள் என்பன திரைப்படங்களின் தனிப்பட்ட போக்கு. அவ்வாறான போக்குகள் சினிமாவாக பிரகடனப்படுத்தப்படுகின்ற போது அதற்கான இரசனை மேலும் அதிகரிக்கிறது என்றே கூறலாம். ஒவ்வொரு பார்வையாளனையும் தன் வசப்படுத்தி வைத்திருக்கும் அழகியலைப் புரிந்து கொண்ட திரைப்படங்கள் மாத்திரம் தான் பேசு பொருளுக்கு உள்ளாகின்றன. காலத்தின் சினிமா கோட்பாடுகளில் மறுதலிக்க முடியாத படைப்பே இத்திரைப்படமாகும்.  

சிறந்த திரைக்கதைக்கான ஒஸ்கார் விருதினை பெற்றுக் கொண்ட இத்திரைப்படம் சினிமாக் கல்லூரிகளில் இன்று வரைக்கும் பாடமாக கற்பிக்கப்படும் ஒரு அலகாகும். இவ்வாறான திரைப்படங்கள் காட்சியலின் மிக நுணுக்கமான பகுதிகளை வெளிப்படுத்துகின்றன.

இவ்வாறான வெளிப்பாடுகள் பார்வையாளர்களின் மனதினில் நீங்காத இடத்தினை வகிக்கின்றபோது அதுவே ஒரு சிறந்த திரைப்படத்திற்கான அங்கீகாரத்தினை வழங்குகின்றது. சினிமாவினை எப்படியான அடிப்படையில் மனிதன் நுகர்கிறான் என்பது இன்னும் நிரூபிக்கப்படாத உண்மையாகவே இருக்கிறது. சினிமா கொண்டியங்கும் சிறப்பான வார்ப்புகளில் The whait hows வடிவமைக்கப்பட்ட ஒரு படைப்பாகும்.   

Sat, 10/19/2019 - 10:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை