சுற்றாடல் பாதுகாப்பு கொள்கைகளை வேட்பாளர்கள் தெளிவுபடுத்த வேண்டும்

ஜனாதிபதி வேட்பாளர்களால் மக்களுக்கு வழங்கப்படும் உறுதிமொழிகள் மற்றும் தேர்தல் பிரகடனங்களில் சுற்றாடல் பாதுகாப்பு பற்றிய கொள்கைகளையும் தெளிவாக குறிப்பிட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

உலகெங்கும் இடம்பெறும் சுற்றாடல் மாசடைதல் இன்று மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களின் இருப்பை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருப்பதால் அரசியல்வாதிகளின் கொள்கைப் பிரகடனத்தில் சுற்றாடல் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் 'ஜனாதிபதி சுற்றாடல் விருது விழா 2019' நேற்று (29) முற்பகல் கொழும்பு தாமரைத்தடாக கலையரங்கில் நடைபெற்றது.இதில் உரையாற்றிய ஜனாதிபதியே இதனைக் குறிப்பிட்டார்.

சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் மக்களின் பங்களிப்பை விரிவுபடுத்துதல் மற்றும் சிவில் சமூக ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி சுற்றாடல் விருது விழா வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படுகின்றது.

சுற்றாடல் பாதுகாப்பு பற்றிய உத்வேகத்தை மேம்படுத்தும்

அதேவேளை, இலங்கையில் சூழல்நேய கைத்தொழில்கள் மற்றும் செயற்திட்டங்களை உருவாக்குவதற்காக அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், கைத்தொழிற்சாலைகள், வர்த்தக, தொழில் நிபுணத்துவ நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை இலக்காகக் கொண்டு சுற்றாடலுக்கான அவர்களது சிறந்த சேவைகளை பாராட்டும் வகையில் 20 பிரிவுகளின் கீழ் இம்முறை விருது வழங்கப்பட்டது. 12 தங்க விருதுகள் மற்றும் 07 சர்வதேச விருது பெறுநர்களுக்கான விருதுகளை ஜனாதிபதி இதன்போது வழங்கினார்.

இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் இசுறு தேவப்பிரிய உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Wed, 10/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை