சஜித் பிரேமதாச வெற்றி இலக்ைக எட்டப் போவதில்லை

இம்முறை சஜித் பிரேமதாச வெற்றி இலக்ைக எட்டப் ​போவதில்லை என்றும் இது தொடர்பில் தாம், சவால் விடுப்பதாகவும் உதய கம்மன்பில எம்.பி.தெரிவித்தார்.

ராஜகிரியவில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, பொதுஜன பெரமுன இணைந்து நடத்திய செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்: தவறு இழைத்தவர்களே தம்மைத் திருத்திக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து வீண் குற்றச்சாட்டுக்களை அடுத்தவர் மேல் சுமத்தக்கூடாது. அவர்கள் திருந்த வேண்டும். மேவின் சில்வா போன்றோர் தற்போது பல்வேறு விதமான கூற்றுக்களை வெளியிட்டு வருகின்றனர். அவர்கள் செய்த குற்றம் என்ன வென்று முழுநாடும் அறியும். ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச பொய்களை சோடித்து

மக்கள் மத்தியில் உரையாற்றி வருகின்றார். அவ்வாறு பொய் பேச வேண்டாம் என்று நான் அவருக்குக் கூறுகிறேன்.

ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல் தொடர்பான பழியை கோட்டாபய ராஜபக்ஷ மீது சுமத்தப்பார்கின்றனர். அதனோடு சம்பந்தப்பட்டவர்கள், தவறு செய்யாதவர்கள் போல் செயற்படுகின்றனர் என்றும் அவர் தெரித்தார்.

ஊடகவியலாளர் ஒருவர் ஹிஸ்புல்லாவின் உதவியைப் பெற்றுக்கொள்ள பொதுஜனபெரமுன முயற்சிக்கன்றதா? எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அவர் ஒவ்வொரு வேட்பாளரும் பல்வேறு விதமாக தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிடுவர். ஹிஸ்புல்லாவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் உள்ளடக்கத்தை வைத்து அவர் எம்முடன் நேரடித் தொடர்பு இருப்பதாக தெரிவிப்பது ஏற்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

(ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 10/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை