கிழக்கு பொருளாதாரத்திற்கு மட்டு. சர்வதேச விமான நிலையம் உதவும்

யுத்தத்தால் அழிவுற்ற கிழக்கு மாகாண மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையம் பெரிதும் உதவுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுத் தெரிவித்தார்.  

நேற்று (4) மாலை மட்டக்களப்புக்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மட்டக்களப்பு விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தல் தொடர்பாக ஆராயும் உயர்மட்ட கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.  

விமான நிலையத்தை பார்வையிட்ட பிரதமர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,  

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் முதலாவதாக சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்படுகிறது. மட்டக்களப்பு விமான நிலையமும் சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்பட்டதுடன் இந்தியாவிலிருந்து விமானங்கள் மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடியாக வரும். அதன் மூலம் சுற்றுலாத்துறை இந்த மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தி காணும். சுற்றுலாத்துறை அபிவிருத்தி கண்டால் இம் மாவட்டத்தின் பொருளாதாரம் நேரடியாக விருத்தியடையும்.  

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல சுற்றுலா விடுதிகள் உள்ளன.அவைகளும் இதனால் வலுப்பெற ஆரம்பிக்கும். சுற்றுலா பயணிகளின் வருகையும் பெருமளவில் அதிகரிக்கும்.  

இவ்விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதன் பிரதான நோக்கம் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி அடையச் செய்வதுதான் என்றும் பிரதமர் தெரிவித்தார்.  

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சுற்றுலா விடுதிகளின் உரிமையாளர்களுடனும் பிரதமர் பேச்சு நடத்தினார்.மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார், சுற்றுலாத்துறை மற்றும் விமான நிலைய அதிகாரிகள் உட்பட பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு குறூப் நிருபர்   

 

மட்டக்களப்பு குறூப் நிருபர்  

Sat, 10/05/2019 - 09:53


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை