அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்தும் ஆவணத்தை சிங்கப்பூர் அரசு ஏற்றது

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை நாடு கடத்துவது தொடர்பான ஆவணங்கள் சிங்கப்பூர் சட்ட மாஅதிபர் திணைக்களத்திடம் கிடைத்துள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்துவதற்கான ஆவணங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த மாதம் கையொழுப்பமிட்டிருந்தார். பின்னர் இந்த ஆவணங்கள் சிங்கப்பூரில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சுக்கு கையளிக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த ஆவணங்கள் தற்போது சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பாக அவர்கள் பரிசீலித்து வருவதாகவும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பு செயலாளர் அரச சட்டத்தரணி நிஷார ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி

தொடர்பிலான விசாரணைகளுக்கு, அர்ஜுன மகேந்திரனை நீதிமன்றில் ஆஜராகுமாறு கடந்த ஜூன் மாதம் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

அர்ஜுன மகேந்திரன் நீதிமன்றில் ஆஜராகாமையால் கடந்த ஜூலை 19ம் திகதி அவருக்கு எதிராக பிடிவிறாந்து உத்தரவு பிறக்கப்பட்டிருந்த நிலையிலே அவரை நாடு கடத்துவதற்கான ஆவணங்களில் ஜனாதிபதி கையெழுத்திட்டிருந்தார்.

 

Wed, 10/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை