பொருளாதார வளர்ச்சி 7.5% எட்டினால் ஓய்வூதியத்தை நவீனமயப்படுத்தலாம்

எமது பொருளாதாரம் 7.5% வளர்ச்சியை அடைந்தால், ஓய்வூதியத் திட்டத்தை மேலும் நவீனமயப்படுத்த முடியும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இந்தப் பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

ஓய்வு பெற்றோரின் தன்னலமற்ற அர்ப்பணிப்புச் சேவையானது அரச பொறிமுறையை பாதுகாக்க பெரிதும் உதவியுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தேசிய ஓய்வூதியக்காரர்களின் தினம் நேற்று தாமரைத்தடாக அரங்கில் அனுஷ்டிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு கூறினார்.

இங்கு உரையாற்றிய பிரதமர்:

ஓய்வு பெற்றோர் நாட்டின் அபிவிருத்திக்காக செய்த தியாகங்கள், அர்ப்பணிப்புகளை பாராட்டிக் கெளரவிக்கவே ஒக்டோபர் 08 ல் ஓய்வு பெற்றோர் தினம் கொண்டாடப்படுகிறது.

நாட்டில் இடம்பெற்ற 30 வருட கால யுத்தம், 2004 இல் ஏற்பட்ட சுனாமி, மற்றும் 1977, 1988/1989 ஆகிய காலப்பகுதிகளில் இடம்பெற்ற கலகங்களின்போது ஓய்வுபெற்றோரில் பலர் தமது

 

உயிர்களைத் துறந்தனர். மேலும் பலர் வேறு வழிகளிலும் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரினதும் தன்னலமற்ற சேவைக்காக நான் அவர்களுக்கு நன்றிகூற விரும்புகிறேன்.

மகாவலித் திட்டம், கோட்டே நிர்வாக நகரம் மற்றும் நாடளாவிய ரீதியில் தண்ணீர் மற்றும் மின்சர இணைப்புகளை வழங்குவதில் ஓய்வுபெற்றோர் பாரிய பங்களிப்புக்களை வழங்கியுள்ளனர். அத்துடன் யுதத்தின் பின்னர சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் இவர்கள் பெரும் பங்களித்தனர்.

2005 இல் பாரிய கடன் சுமையுடனே நாம் நாட்டைப் பெறுப்பேற்றோம்.எனினும் அந்தக் கடன்களுக்கான வட்டியை உரிய முறையில் செலுத்தி சர்வதேச சமூகத்திடம் மேலும் கடன் பெற எம்மால் முடிந்துள்ளது.இதனால் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தவும் முடிந்தது.

கடந்த 5 வருடங்களில் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஓய்வூதிய முரண்பாடுகளை எம்மால் சீர்செய்ய முடிந்துள்ளது. மொத்தத்தில் 85 சதவீத ஓய்வூதிய முரண்பாடுகள் இப்போது சீர் செய்யப்பட்டுள்ளன.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் வீடுகளுக்கு வெள்ளைவேன்களே வந்தன. இன்று சுச்செரிய அம்பியுலன்ஸ்களே வீடுகளுக்கு வந்து உதவுவதாகவும் பிதமர் மேலும் கூறினார்.

Wed, 10/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை