ஈக்வடோர் பாராளுமன்றத்தை ஆர்ப்பாட்டக்காரர் முற்றுகை

ஈக்வடோர் பாராளுமன்றத்திற்குள் பாதுகாப்பு படையினர் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து அரச கட்டடங்களுக்கு அருகில் இரவு நேர ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் பாதுகாப்பை மீறி சிறுது நேரம் பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை கண்ணீர் புகைப்பிரயோகம் பயன்படுத்தப்பட்டு கலைக்கப்பட்டதாக பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜனாதிபதி லெனின் மொரேனே கடந்த வாரம் அவசர நிலையை பிரகடனப்படுத்தியபோதும் பழங்குடி குழுக்களால் முன்னெடுக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டங்களை தணிக்கமுடியவில்லை.

நாட்டில் அமுலில் உள்ள சிக்கன நடவடிக்கைளை முடிவுக்குக் கொண்டுவந்து எரிபொருட்களுக்கான மானியத்தை மீண்டும் தரும்படி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோருகின்றனர். மானிங்கள் நீக்கப்பட்டதை அடுத்து கடந்த வாரம் பெட்ரோ விலை 100 வீதத்திற்கும் அதிகம் உயர்ந்தது. இந்த பதற்றம் காரணமாக ஜனாதிபதி லெனின் மொரேனோ அரச செயற்பாடுகளை தலைநகரில் இருந்து விலக்கிக் கொண்டுள்ளார்.

பழங்குடியினர் தலைமையிலான ஆர்ப்பாட்டங்கள் கடந்த சில தசாப்தங்களில் மூன்று ஜனாதிபதிகளை பதவி கவிழ்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thu, 10/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை