இந்திய துணைக் கண்டத்தின் அல் கொய்தா தலைவர் பலி

அமெரிக்கா மற்றும் ஆப்கான் படையினர் கடந்த மாதம் கூட்டாக நடத்திய இராணுவ நடவடிக்கை ஒன்றில் முன்னணி அல் கொய்தா தலைவர் கொல்லப்பட்டதாக அப்கானிஸ்தான் உளவுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஹெல்மாண்ட் மாகாணத்தில் தலிபான் வளாகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இந்திய துணைக் கண்டத்தின் அல் கொய்தா தலைவர் ஆசிம் உமர் கொல்லப்பட்டார் என்ற அறிவிப்பை தேசிய பாதுகாப்பு இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.

கடந்த செப்டெம்பர் 23 ஆம் திகதி இடம்பெற்ற இந்த தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

உமர் கொல்லப்பட்டதை அமெரிக்கா மற்றும் அல் கொய்தா அமைப்பு உறுதி செய்யவில்லை.

எனினும் தலிபான்கள் இந்த செய்தியை மறுத்துள்ளனர். “எதிரிகளின் இட்டுக்கட்டிய பிரசாரம்” என்று அதன் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த தாக்குதலில் பொதுமக்கள் அதிகம் பேர் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய துணைக்கண்ட அல் கொய்தா பிரிவு உருவாக்கப்பட்டது தொடக்கம் அதன் தலைவராக உமர் இருந்து வந்தார்.

Thu, 10/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை