கோரிக்கைகள் நிறைவேறும் வரை கிரிக்கெட்டுக்கு திரும்ப மாட்டோம்

பங்களாதேஷ் வீரர்கள் போராட்டம்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி வீரர்கள், கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையிடம் முன்வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தாம் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட மாட்டோம் என அணியின் வீரர்கள் போர்க் கொடி உயர்த்தியுள்ளனர்.

பங்களாதேஷ் பிரிமீயர் லீக் மற்றும் டாக்கா பிரிமீயர் லீக்கில் விளையாடும் உள்நாட்டு வீரர்களுக்கு ஒப்பந்தம் செய்து கொண்டதன் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்தது.

இந்த நிலையில்,இதற்கு சிரேஷ்ட வீரர்கள் உட்பட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு பதிலாக வீரர்கள் பல்வேறு யோசனைகளையும், கோரிக்கைகளையும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையிடம் முன்வைத்தனர்.

எனினும், அதற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, செவிமடுப்பதாக இல்லை. இதனால் வீரர்கள் போராட்டத்தில் குறித்துள்ளனர். இதற்கிடையில் இதுகுறித்து

இதுகுறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவர் ஷகிப் அல் ஹசன், மெஹ்முதுல்லா, முஷ்பிகுர் ரஹிம், டமீம் இக்பால், ருபெல் ஹெசைன், மொயிடி ஹசன் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.

இதில் ஷகிப் அல் -ஹசன் கூறுகையில், ”எங்களது போராட்டத்தில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியை சேர்க்கவில்லை. ஏனெனில், அவர்கள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் இங்கே இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் எங்களுடன் இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

நாங்கள் கிரிக்கெட் விளையாடப் போவதில்லை. எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை நாங்கள் திரும்பமாட்டோம்” என கூறினார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, அடுத்த மாத முதல் வாரத்தில் இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரி-20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

இதற்கிடையில் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் சபைகளுக்கிடையிலான பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Wed, 10/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை