பிரபல நாளிதழ்கள் மீது பிரித்தானிய இளவரசர் வழக்குப் பதிவு

பிரித்தானிய இளவரசர் ஹரி, தனது தாயைப் போன்று மனைவியும் ஊடகங்களால் குறிவைக்கப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

அந்த வகையில், ‘தி சன்’ மற்றும் ‘டெய்லி மிரர்’ ஆகிய 2 நாளிதழ்களின் நிர்வாகங்கள் தமது தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டதாக கூறி அவற்றின் மீது இளவரசர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சஸ்ஸெக்ஸ் சீமாட்டி மேகன் மேர்க்கல் தனது தந்தைக்கு எழுதிய தனிப்பட்ட கடிதத்தை அனுமதியில்லாமல் வெளியிட்டமை தொடர்பாக மெயில் ஒன் சண்டே என்ற நாளிதழ் மீதும் வழக்கு தொடர்ப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்ட இளவரசர் ஹரி, தாயார் டயானாவை போன்று மனைவி மேகனும் ஊடகங்களால் சிக்கல்களுக்கு உள்ளாவது தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

மேகனின் கடிதம் தொடர்பான பரபரப்பு அடங்குவதற்குள் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளமை தீவிர நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் இதற்கான ஆதாரங்களையோ, எந்தவகையாக உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டது என்பது குறித்த மேலதிக தகவல்களையோ பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவிக்க மறுத்துவிட்டது.

Wed, 10/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை