28 சீன அமைப்புகளுக்கு அமெரிக்கா வர்த்தக தடை

முஸ்லிம்கள் மீதான வன்முறை:

சீனாவில் உய்குர் இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக பெருமளவில் வன்முறைகள் மற்றும் தாக்குதல்கள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து அமெரிக்கா 28 சீன அமைப்புகளை கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது.

குறித்த அமைப்புகளால் அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து எந்தப் பொருட்களையும் கொள்முதல் செய்ய முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு கொள்வனவுகளை மேற்கொள்வதாயின் வொஷிங்டனின் அனுமதியை பெறாது எந்த நடவடிக்கைகளும் இடம்பெறக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நிறுவனங்கள் மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபட்டதாக அமெரிக்க வணிக துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு சீனாவில் ஜின்ஜியாங் பகுதியில், விசாரணையின்றி லட்சக்கணக்கான முஸ்லிம்களை அடைத்து வைத்திருப்பதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டப்படுகின்றது.

எனினும், 28 அமைப்புகள் மீதான இந்தத் தடை குறித்து சீனா இதுவரை எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.

தடைசெய்யப்பட்ட அமைப்புகளில் அரச முகவரகங்கள், கண்காணிப்பு கருவிகளில் நிபுணத்துவம் பெற்ற தொழில்நுட்ப நிறுவனங்களும் அடங்குகின்றன.

எவ்வாறாயினும், சீனாவின் அமைப்புகள் மற்றும் குழுக்கள் வர்த்தக ரீதியாக தடை செய்யப்படுவது இது முதல் தடவையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

Wed, 10/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை