ஆப்கான் பள்ளிவாசல் குண்டு வெடிப்பு: பலி 70 ஆக உயர்வு

கிழக்கு ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட பள்ளிவாசலின் இடிபாடுகளிலிருந்து தங்கள் அன்புக்குரியோரின் உடல்களைக் கிராமவாசிகள் இன்னமும் தேடி வருகின்றனர்.

நங்கஹார் மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகையின்போது நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. அதில் குறைந்தது 27 பேர் பாடசாலை மாணவர்கள் என நம்பப்படுகிறது.

தாக்குதல் நடந்த வேளையில் 100 க்கும் மேற்பட்டோர் பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. பொதுவாக இத்தகைய தாக்குதல்களை நடத்தும் தலிபான் அமைப்பு, இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து அப்பகுதியில் வசிக்கும் பழங்குடி தலைவர் கூறும்போது, “பள்ளிவாசல் முற்றிலுமாக சிதைந்து விட்டது. என் மனதை உடைக்கும் காட்சிகளை நான் கண்டேன்” என்றார்.

Mon, 10/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை