மருத்துவர்கள் வேலைநிறுத்தம்; வைத்தியசாலைகள் ஸ்தம்பிதம்

நோயாளர்கள் பெரும் அவதி

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நேற்று புதன்கிழமை முன்னெடுத்த 24 மணித்தியால பணி பகிஷ்கரிப்பு காரணமாக வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவு முற்றாக ஸ்தப்பிதமடைந்திருந்திருந்ததுடன், பொது மக்கள் பெரும் அசௌகரிங்களுக்கும் முகங்கொடுத்தனர்.

நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து கொழும்பு பிரதான வைத்திசாலைக்கு வருகை தந்த நூற்றுக்காணக்கான நோயாளர்கள் ஏமாற்றத்துடனே வீடு திரும்பியதாக வெளிநோயாளர் பிரிவில் கடமை புரியும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்றுக் காலை 8 மணி தொடக்கம் 24 மணித்தியால பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டது.

சம்பள விவகாரம் உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இவ்வாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரியில் ஈடுபட்டது.

மகப்பேறு, குழந்தைகள், புற்றுநோய்;, சிறுநீரக கிளினிக்குகள் மற்றும் இராணுவ வைத்தியசாலைகளில் மாத்திரமே வழமையான மருத்துவ சேவைகள் முன்னெடுக்கப்பட்டன.

என்றாலும், கொழும்பு பிரதான வைத்தியசாலை உட்பட நாட்டின் பெரும்பாளான வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவு செயலிழந்தே காணப்பட்டது.

நோயாளர்கள் நேற்று எதிர்கொண்டிருந்த அசௌகரியங்கள் குறித்து கொழும்பு பிரதான வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் கடமைப்புரிமையும் ஊழியர்களிடம் வினவிய போதே,

பெரும்பளவான நோயாளர்கள் இன்று தமது வைத்திய தேவைகளுக்காக வந்திருந்தனர். ஆனால், வைத்திய அதிகாரிகள் இல்லாமையால் அவர்கள் ஏமாற்றத்துடனேயே வீடு திரும்பினர். பலர் தூரப் பிரதேசங்களில் இருந்து வருகைத்தந்திருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

பணிப்பகிஷ்கரிப்புத் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண,

“அரச சேவை என்பது மிகவும் உன்னதமான சேவை. வைத்தியர்களின் பிரதான கடமையானது, நாட்டின் சாதாரண மக்களின் வாழ்க்கையை பாதுகாப்பதாகும்.

வைத்தியர்களின் தேவை அத்தியாவசிய தேவையாகும்” எனக் கூறியுள்ளார்.

இதேவேளை, தமது போராட்டத்திற்கு அரசாங்கம் உறுதியான தீர்வுகளை வழங்காவிடின் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படலாமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 09/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை