கொழும்பு ஆனந்தாவை வீழ்த்திய யாழ்.இந்து

யாழ் இந்துக் கல்லூரி மற்றும் கொழும்பு ஆனந்தா கல்லூரிகளுக்கிடையிலான சிவகுருநாதன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ண 2019 கிரிக்ெகட் போட்டியில், கொழும்பு ஆனந்தாக் கல்லூரி அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி யாழ். இந்துக்கல்லூரி அணி வெற்றி பெற்றது.

யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் கடந்த சனிக்கிழமை 8 ஆவது தடவையாக இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆனந்தாக்கல்லூரி அணி துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது.

அவ் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் சத்மிர 44 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, ஆனந்தாக் கல்லூரி அணி 20 ஓவர்களில், 5 விக்கெட்டுகளை இழந்து 79 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பந்துவீச்சில் யாழ். இந்துக் கல்லூரி சார்பில் பிரியந்தன் இரண்டு விக்கெட் டுகளை கைப்பற்றினார்.

வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய யாழ். இந்துக்கல்லூரி அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 80 ஓட்டங்களை பெற்று 4 விக்கெடுக்களால் வெற்றிபெற்றது.

துடுப்பாட்டத்தில் யோகீசன் 16 ஓட்டங்களை யும், கஜனந், கோமைந்தன் தலா 14 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்து வீச்சில் ஆனந்தாக்கல்லூரி அணி சார்பில் திசிக இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ஆட்டநாயகன் மற்றும் சிறந்த துடுப்பாட்ட வீர்ராக கொழும்பு ஆனந்தாக்கல்லூரி அணி வீரர் சத்மிர தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் சிறந்த பந்து வீச்சாளராக ஆனந்தாக் கல்லூரி வீரர் திசிகவும், சிறந்த களத்தடுப்பாளராக யாழ். இந்துக் கல்லூரி அணி வீரர் தனுஸ்ரனும், சகல துறை வீரராக இந்துக்கல்லூரி வீரர் கோமைந்தனும் தெரிவு செய்யப்பட்டனர்.

இதேவேளை நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், சிவில் விமான போக்குவரத்து மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவும் கலந்துகொண்டனர்.

(நல்லூர் விசேட நிருபர்)

Tue, 09/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை