மருதமுனை எலைட் கிரிக்கெட் சுற்றுப் போட்டி: கல்பனா அணி இறுதிப் போட்டிக்கு தெரிவு

கிறிஸ்டல் - எலைட் அரையிறுதி மழை காரணமாக ஒத்திவைப்பு

மருதமுனை எலைட் விளையாட்டுக்கழகத்தின் 27வது வருட நிறைவை முன்னிட்டு நடாத்தப்படும் 'எலைட் வெற்றிக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டி- 2019' இறுதிப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் (15) ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக் கிழமை பி.ப.3.00 மணிக்கு மருதமுனை மசூர்மௌலான விளையாட்டு மைதானத்தில் நடைபெற ஏற்பாடாகி இருந்தது எதிர்பாராத விதமாக திடீரென ஏற்பட்ட மழை காரனமாக அரையிறுதிப் போட்டி ஒன்றும் மற்றும் இறுதிப்போட்டி என்பன எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20ம் திகதி ) இடம்பெறவுள்ளன.

அணிக்கு 11 பேர் கொண்ட 7 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக மருதமுனை மசூர்மௌலான விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தச் சுற்றுப் போட்டியில் யுனிவர்ஸ், மருதம், கிறிஸ்டல், கல்பனா, மிமா, எலைற், றோயல், ஒலிம்பிக், கோல்ட்மைன்ட், றெட்விங்ஸ், பென்ஷீன் , பிரிஸ்பேன், கிங்ஸ்டன், மெரிடியன், அக்பர், கிறஸ்ற் ஆகிய 16 அணிகள் விளையாடி வருகின்றன.

சுற்றுப் போட்டியின் காலிறுதிப் போட்டிகள் மற்றும் அரையிறுதிப் போட்டி என்பன (15) நடைபெற்றன. காலிறுதிப் போட்டிகளில் கல்பனா, எலைற், மருதம், கிறிஸ்டல் ஆகிய அணிகள் வெற்றிபெற்று அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தன.

முதலாவது அரையிறுதிப் போட்டி மருதமுனை கல்பனா மற்றும் மருதம் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் மருதம் அணியினர் ஏழு (07) ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுக்களை இழந்து 27 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்பனா அணியினர் 2.4 ஓவர்களில் ஒரு விக்கட்டை இழந்து 30 ஓட்டங்களை பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவானார்கள்.

இரண்டாவது அரையிறுதிப் போட்டி மருதமுனை கிறிஸ்டல் மற்றும் எலைற் அணிகளுக்கிடையில் நடைபெற்றன. இந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற எலைற் அணியினர் முதலில் துடுப்பெடுத்தாட இணக்கம் தெரிவித்தனர் ஏழு (07) ஓவர்கள் முடிவில் 7 விக்கட்டுக்களை இழந்து எலைட் அணியினர் 51 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். வெற்றி இலக்கு 52 ஓட்டங்கள் என்ற நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கிறிஸ்டல் அணியினர் 4.5 ஓவர்களில் 06 விக்கட்டை இழந்து 21 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் இரண்டாவது அரையிறுதிப் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) ஆம் திகதி நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளன.

இறுதிப் பரிசளிப்பு நிகழ்வின் போது வெற்றி பெறும் சம்பியன் அணிக்கு 25000.00 ரூபா பெறுமதியான வெற்றிக்கிண்ணமும் இரண்டாம் இடத்தை பெறும் அணிக்கு 15000.00 ரூபா பெறுமதியான வெற்றிக்கிண்ணமும் தொடரின் சிறந்த பந்து வீச்சாளர், துடுப்பாட்ட வீரர்களுக்கு 8000.00 ரூபா பெறுமதியான மின் விசிறிகளும் பரிசாக வழங்கப்படவுள்ளன. கழகத்தின் தலைவர் எம்.ஐ.நஜிமுல் றியாஸ் தலைமையில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு மருதமுனை இல்ஹாஸ் பூட் சிட்டி உரிமையாளர் பி.எம்.எம்.இல்ஹாஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

எலைட் விளையாட்டு கழகத்தின் செயலாளர் சுப்பர் சென்டர் உரிமையாளர் ஏ.ஆர்.முஹம்மட் அஸாம் கௌரவ அதிதியாகவும், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ரி.எம்.முபாரிஸ் விசேட அதிதியாகவும் இன்னும் பல அதிதிகள் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்

(பெரியநீலாவணை விசேட நிருபர்)

Tue, 09/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை