நீர்வீழ்ச்சியில் சிக்கிய குடும்பம் போத்தல் செய்தியால் தப்பியது

அருவியில் சிக்கிக் கொண்ட குடும்பம் ஒன்று போத்தலில் பொறிக்கப்பட்ட உதவி எச்சரிக்கையினால் காப்பாற்றப்பட்டது. கர்டிஸ் விட்சன், அவரது காதலி, மகன் மூவரும் கலிபோர்னியாவில் அரோயோ செகோ நதியோரமாக நடந்துகொண்டிருந்தனர். அருவியிலிருந்து கயிறு வழியாகக் கீழே இறங்கி அவர்கள் தங்கும் முகாமிற்குச் செல்வது அவர்களின் திட்டம். ஆனால் வழியில் பள்ளத்தாக்கில் அவர்கள் சிக்கிக்கொண்டனர்.

அருவியிலிருந்து இறங்கக் கயிறு ஏதுமில்லை. உதவிக்காக யாரையும் தொடர்புகொள்ளவும் முடியவில்லை.

விட்சன் தம் பையில் இருந்த துண்டுச் சீட்டு ஒன்றை எடுத்து அதில் அவர்கள் சிக்கியிருக்கும் விவரத்தை எழுதி காலி போத்தலினுள் வைத்தார். போத்தலின் வெளிப்புறத்தில் ‘உதவுங்கள்’ என்ற சொல்லையும் பொறித்தார். போத்தலை அருவியின் நீரில் மிதக்கவிட்டார். சுமார் 400 மீற்றர் தொலைவில், நதி வழியாக நடந்துகொண்டிருந்த இருவர் போத்தலைக் கண்டெடுத்தனர். ஒரு சில மணிநேரங்களுக்குப் பின் மீட்புப் பணியினர் விட்சன் குடும்பத்தைக் கண்டுபிடித்தனர். மூவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். தம் அதிர்ஷ்டத்தை எண்ணி வியப்பதாகவும், தமது உதவிக் கடிதத்தைக் கண்டுபிடித்தவர்களுக்கு நன்றி கூற விரும்புவதாகவும் விட்சன் கூறினார்.

Fri, 09/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை