டோரியன் புயல்: பஹாமஸில் 2500 பேரை காணவில்லை

பஹாமஸில் கடும் சேதங்களை ஏற்படுத்திய டோரியன் புயலால் 2500 பேர் காணாமல்போயிருப்பதாக அந்நாட்டின் தேசியப் பேரிடர் முகமை தெரிவித்துள்ளது. கரிபீயன் தீவுகளில் உள்ள பஹாமஸ் மற்றும் அபகோ தீவுகளை டோரியன் புயல் கடந்த வாரம் தாக்கியது. இதில் பெரும் சேதம் பஹாமஸ் தீவுக்கு ஏற்பட்டது. இந்தத் தலைமுறைக்கான பேரழிவை இந்தப் புயல் விட்டுச் சென்றிருக்கிறது என்று டோரியன் தாக்கம் குறித்து பஹாமஸின் பிரதமர் கூறியிருந்தார்.

டோரியன் புயலுக்கு பஹாமஸில் 43 பேர் பலியாகினர். சுமார் 70 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று பஹாமஸ் அரசு தெரிவித்தது.

இந்நிலையில் இந்த புயலால் 2500 பேர் காணாமல்போயிருப்பதாகவும் அவர்களின் கதி என்ன என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் பேரிடர் முகமையின் செய்தித் தொடர்பாளர் கார்ல் ஸ்மித் கூறியுள்ளார்.

பஹாமஸைத் தாக்கிய புயல் 5 வகையைச் சார்ந்தது என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இது வெப்பமண்டல சூறாவளி எனப்படுகிறது. பூமியில் உருவாகக்கூடிய சூறாவளிகளிலேயே மிகவும் வலிமையானது இவ்வகை சூறாவளிகளாகும்.

Fri, 09/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை